இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா – சமந்தா ஆகியோர் நடிப்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’.
படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அண்மையில் வெளியான ’Two Two Two’ என்ற பாடல் ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் டப்பிங் இடம்பெற்றபோது, சமந்தாவை கட்டியணைத்து தனது அன்பை வெளிப்படுத்தும் நயனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடீயோவை தனது சமூக வலைத்தளத்தில் நடிகை சமந்தா பகிர்ந்துள்ள நிலையில். வீடியோ செம வைரலாகி வருகிறது.
#cinema
Leave a comment