298435186 173049825250243 5489559426093878547 n
சினிமாபொழுதுபோக்கு

விடுமுறையை கொண்டாட ஸ்பெயின் பறந்த நட்சத்திர ஜோடி

Share

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி மீண்டும் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விமானத்தில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

பல ஆண்டுகளாக காதலித்து வந்த நயன் – விக்கி ஜோடி ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் 9ஆம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்தவுடன் திருப்பதி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு சென்ற இந்த ஜோடி அலையை தரிசனங்களைமுடித்துவிட்டு தாய்லாந்துக்கு தேனிலவு சென்றனர்.

தேனிலவு முடிந்து நாடு நிரும்பிய இவர்கள் மீண்டும் தமது வேலையில் கவனம்செலுத்த தொடங்கினர். நயன்தாரா, ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். அதேநேரம் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பிஸியாக இருந்தார்.

இந்த நிலையில் தற்போது நயன் – விக்கி தம்பதிகள் ஒரு சிறிய பிரேக் எடுத்துள்ளனர். விடுமுறையை கொண்டாட ஸ்பெயின் சென்றுள்ளனர்.

ஸ்பெயின் பத்து நாட்கள் அவர்கள் இருப்பார்கள் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பியவுடன் தங்களது பணியை தொடர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

நயன் – விக்கி தம்பதிகள் விமானத்தில் ஸ்பெயின் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருவதை அடுத்து தற்போது இவர்கள் இரண்டாவது தேனிலவுக்கு சென்றுள்ளனர் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

298267733 173049878583571 4953538595250467468 n

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 6909cc4d3399b
சினிமாபொழுதுபோக்கு

‘அதர்ஸ்’ செய்தியாளர் சந்திப்பில் எல்லை மீறிய யூடியூபர்கள்: “முட்டாள்தனமான கேள்வி” – நடிகை கௌரி கிஷன் கோபம்!

‘அதர்ஸ்’படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நடிகை கௌரி கிஷனிடம் சில யூடியூபர்கள் வரம்பு மீறிய கேள்விகளை...

ajith
சினிமாபொழுதுபோக்கு

அஜித்தின் புதிய ஆர்வம்: ரேஸுக்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி! 65வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா?

திரைப்படம் தவிர தனக்குப் பிடித்த விஷயங்களிலும் தொடர் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் அஜித்குமார். அவர்...

harish kalyan pandiraj
சினிமாபொழுதுபோக்கு

‘தலைவன் தலைவி’ வெற்றிக்குப் பிறகு பாண்டிராஜ்: அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண் – இது இரட்டை ஹீரோ கதையா?

நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியாகிப் பெரிய வெற்றியைப்...

rashmika mandanna and vijay devarakonda marriage 2025 11 06 12 39 52
சினிமாபொழுதுபோக்கு

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பிப்ரவரியில் உதய்பூர் அரண்மனையில் நடக்கப் போகிறதா?

நடிகை ராஷ்மிகா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த பல வருடங்களாகக் காதலித்து வரும்...