தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, வொர்க் அவுட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான தமன்னா, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, உட்பட தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் பாலிவுட் முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார் தமன்னா. ஹிந்தி மற்றும் தெலுங்கு உட்பட சுமார் 6 படங்கள் தமன்னா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 16 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களால் மிகப்பெருமளவில் வைரலாகி வரும் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்
அவரது இந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Cinema