12 21
சினிமாபொழுதுபோக்கு

விஜயை இப்படித்தான் ப்ரோமோஷன் செய்தேன்.. – உண்மையை உடைத்த சந்திரசேகர்!

Share

விஜயை இப்படித்தான் ப்ரோமோஷன் செய்தேன்.. – உண்மையை உடைத்த சந்திரசேகர்!

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களை உருவாக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர்  சமீபத்தில் ‘கூரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகர், தன் மகனான தளபதி விஜய் எப்படி திரையுலகில் வளர்ந்தார் என்பதையும், ஒரு ஹீரோவிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்க, எப்படி ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கினார்.

சந்திரசேகரின் இந்த பேச்சு, நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததோடு, சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அவர் தனது உரையில், புதிய இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

அவர் கூறியதாவது , “ஒரு படத்தின் வெற்றிக்கு, இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் ஆகியோர் மிக முக்கியமானவர்கள். ஆனால், அவர்கள் அனைவரும் புதுமுகமாக இருந்தால்தான், அந்த வெற்றி முழுவதுமாக ஹீரோவின் பெயரில் சேரும். அதனால் தான் என் மகன் விஜயை திரையுலகில் அறிமுகப்படுத்தும் போது, புதிய இயக்குநர்களை தேர்வு செய்தேன் ” என்றார்.

ஒரு நடிகர் முன்னணி நிலையை அடைய, மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் அத்தகைய இடத்தை அடையவேண்டும் என்றால் அதற்கு சரியான படம், சரியான விளம்பரம் மற்றும் சரியான முறையில் அவரை முன்னிறுத்த வேண்டும். அதனால்தான், நான் விஜயை பெரிய இயக்குநர்களை வைத்து கதை எடுக்காமல் புதிய இயக்குநர்களை கொண்டு  நடிக்க வைத்தேன்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...