11 26
சினிமாபொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்த ரஜினி..!

Share

தமிழ் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அறிவித்த ரஜினி..!

“வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை ” என்னதான் வயசு 70 தாண்டினாலும் கையில் வரிசையில் படத்தை வைத்திருக்கும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகின்றார்.

அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த இரு படங்களும் முடிந்த பின்னர் dawn pictures தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக வதந்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது ரஜினி கூலி பட சூட்டிங் பின்னர் மூன்று மாதங்கள் ஒய்வு எடுக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த ஒய்வு நேரத்தினை தனது சுயசரிதையினை ரஜினி எழுதவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆரம்பங்களில் ஒரு எழுத்தாளரை வைத்து இவர் தனது சுயசரிதையினை எழுத ஆரம்பித்து ஒரு வாரம் முடிந்ததுமே அதனை நிறுத்தியுள்ளதாகவும் இதற்கான காரணம் சுயசரிதை எனின் பல உண்மைகளினை மறைக்காமல் எழுதவேண்டும் அதன் காரணமாக தயங்கியுள்ளதாகவும் எனினும் மீண்டும் அதனை எழுத ஆரம்பிக்க போவதாகவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...