சல்மான் கானுடன் காதல் வயப்பட்ட தளபதி நாயகி

ezgif 3 818a01e42a

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார்.

தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இதைத்தொடர்ந்து இவர் சல்மான் கான் தயாரிக்கவுள்ள இரண்டு படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவும் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மலர்ந்துள்ளதாகவும் இப்போது இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுவதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.

எனினும் பூஜா ஹெக்டே மற்றும் சல்மான் கான் தரப்பில் இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#cinema

 

Exit mobile version