நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் “இதயம் முரளி”.
இந்த திரைப்படத்தை, Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, தமன் இசையமைத்திருந்தார்.
ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், டிராவிட், பகத் பாசில், ரக்ஷன், சுதாகர், ஏஞ்சலின், நிஹாரிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இருப்பினும், பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ. 31.5 கோடி வசூலித்து வெற்றிபெற்றது.
திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதயம் முரளி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அடிப்படையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இதயம் முரளி திரைப்படம், வருகிற 7-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என கூறப்படுகிறது. திரையரங்கில் எப்படி இதயம் முரளி எப்படி கொண்டாடப்பட்டதோ, அதே போல் ஓடிடியிலும் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

