தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது பீஸ்ட் திரைப்படம்.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கு நாள் படம் தொடர்பில் புதுப்புது அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தளபதி – 66 திரைப்படம் தொடர்பான லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி தளபதி – 66 திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளிவந்த தகவல்.
இந்த நிலையில், தற்போது படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை தொடர்பான தகவல் கசிந்துள்ளது.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் தளபதி – 66 தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. எனவே இரண்டு மொழிகளிலும் மிகப் பிரபலமாக இருக்கும் நடிகையை விஜய்க்கு ஜோடியாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதன்படி, பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் இணைய வாய்ப்புக்கள் உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
ஏற்கனவே தளபதியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்த ’பைரவா’ மற்றும் ’சர்கார்’ திரைப்படங்கள் வசூல் ரீதியில் மிகப்பெரும் வெற்றி பெற்றன.
எனவே மூன்றாவது முறையாகவும் இணைந்து வெற்றிகொடுப்பார்களா என்ற மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.
Leave a comment