வாடகை தாய் சர்ச்சை! நயன்தாரா விதிகளை மீறியுள்ளாரா? வெடித்த சர்ச்சை

nayanthara 1665322025374 1665322025524 1665322025524

நயன்தாரா விக்னேஸ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்தது.

நயன்தாரா விவகாரத்தில் திருமணத்துக்கு முன்பே வாடகைத் தாயிடம் கரு வளர்க்கப்பட்டு விதிமீறல் செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்த பிரச்சினை சர்ச்சையானதும் இதுபற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேட்டபோது நயன்தாராவிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் தான் வாடகை தாய் குழந்தை பெற்றுள்ளார். அந்த ஆஸ்பத்திரி, வாடகை தாயின் பெயர் விபரங்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உடனடியாக சேகரித்தனர்.

அவற்றை ரகசியமாக வைத்துள்ள அதிகாரிகள் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் நயன்தாரா விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி விவாதிக்க மருத்துவ துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டி.எம்.எஸ்.சில் இன்று நடைபெற்றது.

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றனர் அதிகாரிகள்.

தற்போது இந்த பிரச்சினை பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.

#Nayanthara

Exit mobile version