IMG 7207
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

சூப்பரான செட்டிநாடு மட்டன் உப்பு கறி! வீட்டிலே செய்வது எப்படி?

Share

சூப்பரான செட்டிநாடு மட்டன் உப்பு கறி வீட்டிலே செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • எலும்பில்லாத மட்டன் – 300 கிராம்
  • சின்ன வெங்காயம் – 20
  • பூண்டு – 20 பற்கள்
  • இஞ்சி – 1 இன்ச்
  • குண்டு வரமிளகாய் – 10
  • தக்காளி – 1
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை

வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டிக் கொள்ளவும்.

மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின் அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி விட வேண்டும். மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கிய பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு குக்கரை திறந்து, அதனை வாணலியில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான செட்டிநாடு உப்பு கறி தயார்!

#Foodrecipes

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...