இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் படங்களை இயக்கிய இயக்குநர்களாக லோகேஷ் கனகராஜ், அட்லீ மற்றும் நெல்சன் ஆகியோர் காணப்படும் புகைப்படமே வைரலாக்கப்பட்டு வருகிறது. குறித்த புகைப்படம் தளபதி விஜய்யால் எடுக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் மிகப்பெரும் வெற்றிப்படங்களை கொடுத்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி, விஜய்யின் மற்றுமொரு வெற்றிப்படமான ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் நடித்து முடித்து திரைக்கு வரவுள்ள ’பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கிய இயக்கியுள்ள இயக்குநர் நெல்சன் ஆகிய மூவரும் இணைந்து காணப்படும் புகைப்படத்தையே லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் விஜய்யால் எடுத்து கொள்ளப்பட்டமையே இதன் சிறப்பாகும்.
இந்த புகைப்படத்தில் தளபதி விஜய் இல்லாவிட்டாலும், விஜய்யால் எடுக்கப்பட்டமையால் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
#Cinema
Leave a comment