1990 காலப்பகுதிகளில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடா என அனைத்து மொழிகளிலும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர். அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் இணைத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் ரோஜா.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரோஜா திருணத்தின் பின்பு திரையுலகிலிருந்து சற்று விலகியிருந்த நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
நடிகை, தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்ட ரோஜா , திருமணத்தின் பின்னர் அரசியலில் இறங்கினார்.
தற்போது ஆந்திரா சட்ட பேரவை உறுப்பினரான ரோஜா அண்மையில் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
அவரது பதவியேற்பு அண்மையில் இடம்பெற்ற நிலையில், தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து சென்னையில் பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளன.
தமிழ் திரை உலகின் பிரபல நடிகையாக இருந்த ரோஜா சமீபத்தில் அமைச்சரான நிலையில் அவருக்கு தென்னிந்திய திரையுலகமே இணைந்து பாராட்டு விழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தென்னிந்திய தீயை நட்சத்திரங்கள் இணைந்து, எதிர்வரும் மே 7-ஆம் திகதி தென்னிந்திய திரையுலகம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் , பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Cinema
Leave a comment