கஞ்சாவுடன் சிக்கிய நடிகை!
கன்னட நடிகை சோனியா அகர்வால் போதைப்பொருள் வைத்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையில் 40 கிராம் கஞ்சா, 12 மதுப்பானப் போத்தல்கள் என்பவை அவரது வீட்டில் சிக்கின.
இதேபோன்று தொழிலதிபர் பரத் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வசனா சின்னப்பா ஆகியோரின் வீடுகளில் நடத்திய சோதனையிலும் கஞ்சா மற்றும் மதுபானப் போத்தல்கள் என்பவை கைப்பற்றப்பட்டன என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொலிஸார் கன்னட நடிகை சோனியா அகர்வால், பரத் உள்ளிட்டோரிடம் போதைப்பொருள் விற்பனை, பயன்பாடு, விருந்துபசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அவர்களின் கைத்தொலைபேசி, மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்து அவற்றில் உள்ள தகவல்களை ஆராய்ந்து வருகின்றனர்.
மூன்று பேரின் வீடுகளிலும் போதைப்பொருள் சிக்கியதால், போதைப்பொருள் பயன்படுத்தியமை தொடர்பில் வழக்குப் பதிவுசெய்ய பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அவர்களை, விரைவில் கைதுசெய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a comment