முன்னணி நடிகர்கள் இரட்டை வேடங்களில் கலக்கிவரும் நிலையில், அந்த பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன்.
விஜய் ரிவியில் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் கால்பதித்துள்ள சிவா நடிகர், தயாரிப்பாளர், பாடகர். பாடலாசிரியர் என பல அவதாரங்களில் கலக்கி வருகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வெளியாக உள்ளது.
இதேவேளை, அறிமுக இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவா நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி சிவகார்த்திகேயன் ‘டான்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சிறு இடைவேளைக்குப்பிறகு ’சிங்கப்பாதை’ எனும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இயக்குநர் அட்லியின் துணை இயக்குநர் அசோக்கின் இயக்கத்தில் வெளியாக இருக்கின்ற இப் படத்தில், அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
இதற்கான அறிவிப்பு விரைவில் படக்குழுவால் வெளியிடப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment