வைகைப்புயல் வடிவேலு மற்றும் நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா ஆகியோர் இணைந்து கலக்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோட்டமை அனைவரும் அறிந்ததே. குறிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து தோன்றும் காட்சிகள் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்படுபவை.
இந்த நிலையில், கடந்த 2001 ஆம் ஆண்டில் வெளியாகி ரசிகர்கள் மனதை திருடிய திடைப்படம்
`மனதை திருடிவிட்டாய்’. பிரபுதேவா – காயத்ரி ஜெயராம் நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படத்தில் பிரபுதேவா நண்பனாக வடிவேலு நடித்திருந்தார்.
இந்த படத்தில் வடிவேலு அடிக்கடி படி வரும் பாடல் ‘சிங் இன் த ரெயின்’ . இந்த பாடல் வரும் காட்சிகள் அனைவராலும் இன்று வரை ரசிக்கப்படுபவை. இந்த பாடலை தெப்போது மீண்டும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர் வடிவேலு – பிரபுதேவா.
சுராஜ் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு பாடலை வடிவேலு பாடவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்க உள்ளார் எனவும் பாடலில் அவரும் தோன்றவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு திரையில் இணைகிறது வடிவேலு – பிரபுதேவா ஜோடி. இந்த நிலையில் இவர்கள் இருவரும் தமது கடந்த கால நினைவுகளை இந்த பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
சற்றும் உடல் மற்றும் முக பாவனை மாறாது வடிவேலு பாடலை படுவதும் பிரபுதேவா அதற்கு அதே ரியாக்சன் கொடுப்பதும் ரசிகர்களை 18 வருடங்களுக்கு முன்னர் அழைத்து செல்கின்றன.
இந்த வீடியோவை தனது ருவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமது நட்பின் வலிமையை உறுதிப்படுத்தியுள்ளனர் வடிவேலு மற்றும் பிரபுதேவா. குறிப்பாக ‘நட்பு’ என்று கப்ஷனுடன் பகிர்ந்துள்ளார் பிரபுதேவா.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#cinema
Leave a comment