simbu 0
சினிமாபொழுதுபோக்கு

இலங்கை தொழிலதிபர் மகளை மணக்கிறார் சிம்பு?

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகதன்மைக் கொண்டவர். இயக்குனர் டி. ராஜேந்திரனின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் சிறந்த நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார்.

தற்போது இவர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாற்பது வயதை நெருங்கியும் சிம்புவிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதற்கு முன்பு இவர் பல முன்னணி நடிகைகளுடன் பல கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார்.

சில காலமாகவே சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் சிம்புவிற்கு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளை அவரது வீட்டார் பார்த்துள்ளதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் புது தகவல் ஒன்று சமூக வலைதளத்தை ஆக்கிரமித்தது.

இந்நிலையில், இந்த செய்திக்கு சிம்பு தரப்பிலிருந்து மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக பரவிய செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம் என்றும் அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம் குறித்த தகவல் உறுதியானால் நாங்களே முதலில் ஊடகத்திடம் சொல்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...