நயன் வீட்டுக்கு விசிட் செய்த ஷாருக்

srk

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்த நடிகர் ஷாருக்கான், நயன்தாராவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நயன்தாராவிற்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. நயன்தாராவின் குழந்தைகளை காணச் சென்ற ஷாருக்கான், வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

#cinema

Exit mobile version