202201161608250922 Tamil News Tamil cinema actor kamalhaasan wishes to vijay sethupathi SECVPF
பொழுதுபோக்குசினிமா

தேடலும் துணிச்சலும் வீண் போகாது! – வாழ்த்து மழையில் விஜய் சேதுபதி

Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடிய நிலையில், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் விஜய் சேதுபதி சேதுபதிக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

உலகநாயகனின் குறித்த வாழ்த்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

உலகநாயகன் தனது வாழ்த்து செய்தியில், “சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என தனது வாழ்த்துகளை விஜய் சேதுபதிக்கு தெரிவித்துள்ளார்.

சினிமாவில் தடம் பாதிக்க வேண்டும் என்ற முழு முயற்சியில் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி, முன்னணி கதாநாயகனாக வளர்ந்து நிற்பவர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லனாகவும் முத்திரை பதித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dc Cover 1ai592ds09gbqlnclh85t15jq6 20181006234506.Medi
பொழுதுபோக்குசினிமா

ஜன நாயகன் தடை: கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும் – நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம்!

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் (Censor...

26 696080a51f9bf
சினிமாபொழுதுபோக்கு

தி ராஜா சாப் உலகமெங்கும் மாஸ் ஓப்பனிங்: ப்ரீ புக்கிங்கில் ரூ. 60 கோடியை அள்ளி பிரபாஸ் சாதனை!

‘பாகுபலி’ புகழ் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ‘தி...

sivakarthikeyan gives latest update about parasakthi movie
பொழுதுபோக்குசினிமா

சிவகார்த்திகேயனின் பராசக்தி: தணிக்கை சான்றிதழ் கிடைத்தது! – நாளை வெளியீட்டிற்குத் தயார்.

இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘பராசக்தி’...

sara arjun jpg
சினிமாபொழுதுபோக்கு

1000 கோடி பட நாயகி இப்போது கிளாமர் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்!

‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்து ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்த சாரா...