சினிமாபொழுதுபோக்கு

நான் உங்க கள்ளக்காதலி இல்ல சீமான் மாமா..! என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வையுங்க!

tamilnaadi 5 scaled
Share

நான் உங்க கள்ளக்காதலி இல்ல சீமான் மாமா..! என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வையுங்க!

தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து, தற்போது அரசியல் கட்சி தலைவராக இருப்பவர் தான் சீமான்.

இவர் இயக்குநராக இருந்தபோது அவர் படத்தில் நடித்த விஜயலட்சுமி என்ற நடிகையுடன் பழக்கம் ஏற்பட, அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்தும் புகார் கொடுத்து வந்தார்.

பல ஆண்டுகளாக இவர்களுக்கு இடையிலான மோதல் நீடித்து வருகிறது. கடைசியாக இவர் சீமான் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்று தான் வசிக்கும் இடத்திற்கே திரும்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி சீமான் தான் என் கணவர் என்றும் தனது கடைசி மூச்சு உள்ளவரை அவரே தனது கணவராக நினைத்து வாழப் போவதாகவும் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதன்படி அவர் தற்போது வெளியிட்ட வீடியோவில்,

பெங்களூரில் உள்ள உயரமான கட்டிடத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த வீடியோவை என் கணவரான சீமான் பார்க்கும் வரை ஒளிபரப்புங்கள். இதை மன்றாடி கேட்கிறேன்.

சீமான் மாமா பெங்களூரில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். நான் உங்ககிட்ட ஆயிரம் சண்டை போட்டாலும் உங்க மேல அவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்பது உங்களுக்கு தெரியும்.

14 வருஷமா நீங்க தான் என் கணவர் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உங்ககிட்டையும் நான் சொன்னேன் கடைசி மூச்சு வரை நீங்கள் தான் என் கணவர் என்று. எதற்கு எனக்கு இந்த தண்டனை. என்னால் உங்களை பிரிந்து வாழவே முடியவில்லை.

தயவு செய்து என்கிட்ட பேசுங்க. இந்த கோர்ட், சண்டை சச்சரவெல்லாம் வேண்டாம். நான் ஒன்றும் உங்களின் கள்ளக்காதலி இல்லை. நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை. பின்னாடி வந்தவர்களுக்கே இவ்வளவு பொஸஸிவ்னஸ் இருக்குன்னா, 2008 இல் இருந்து நீங்க தான் என் உயிர் என்று வாழ்ந்துட்டு இருக்கும் எனக்கு எவ்வளவு பொஸஸிவ்னஸ் இருக்கும் அது ஒன்றும் தப்பு கிடையாது.

நான் இப்போ இங்கிருந்து குதிச்சா தமிழ்நாட்டு மக்கள் உங்களை சும்மா விட்டுருவாங்களா? அப்புறம் உங்க நிலைமை என்ன ஆகும்? ஏன் இப்படி பண்றீங்க மாமா? நீங்க இப்படி செய்தால் நான் வேறு ஒருத்தர கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்கிறீங்களா? போன வருஷம் சமாதானமா பேசினீங்க, மதுரை செல்வம் செய்த தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கணுமா?

தமிழ்நாடு மீடியாக்களே… என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வையுங்க. எனக்கு என் கணவர் வேண்டும்..

இவ்வாறு உருக்கமாக பேசியுள்ள விஜயலட்சுமி. தற்போது விஜயலட்சுமி இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...