samantha
பொழுதுபோக்குசினிமா

குத்தாட்டம் போடும் சமந்தா

Share

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு வரும் குத்துப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட முன்னணி நடிகைகள் சிலரிடம் படக்குழு பேச்சு நடத்தி வந்தது.

தற்போது நடிகை சமந்தாவை அப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அப்பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம்.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...