இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகை சமந்தா.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சமந்தா.
வேறுபட்ட கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது, சர்ச்சை கதாபாத்திரங்களிலும் துணிந்து நடித்து ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இவர்.
நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா அண்மையில் விவாகரத்தும் பெற்றுக்கொண்டார்.
தனிப்பட்ட வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் சமந்தா, அண்மையில் வெளியான புஷ்பா படத்தின் ‘ஓ சொல்லுறியா மாமா’ என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் கொடிகட்டி பறந்தவர்.
விஜி சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் சமந்தா இணைந்து நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
இவைதவிர, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் புதிய படம், தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ மற்றும் ‘யசோதா’ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் நடிகை டாப்ஸியின் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.
படுபிஸியாக படங்களில் கவனம் செலுத்திவரும் சமந்தா அண்மையில் பிரபல தனியார் பத்திரிக்கைக்கு ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்திருந்த நிலையில், தற்போது அதன் வீடியோ வெளியாகி சமந்தா ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
பிறகென்ன சொல்லவா வேண்டும். வீடியோவை படுவேகமாக வைரலாக்கி வருகின்றனர் சமந்தா ரசிகர்கள்.
#Cinema
Leave a comment