பிரபல நடிகர்களின் திரைப்படங்களுக்கு நிகராக, ‘ருத்ர தாண்டவம்’ படம் மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘திரௌபதி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி இயக்கிய திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’.
ரிச்சர்ட் ரிஷி, கதாநாயகனாக நடிப்பில் வெளியாகிய இப்படத்தில், முன்னணி இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்திருந்தார்.
சின்னத்திரை தொடர்களில் பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
கடந்த 1ஆம் திகதி இப் படம் திரையரங்களில் வெளியாகியது.படம் வெளியான நாள் முதல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால் படம் தொடர்ந்தும் வசூல் வேட்டை நடத்துகிறது.
3 நாட்களில் இந்திய மதிப்பில் 7.5 கோடி ரூபா வசூல் படைத்து, அசத்தியுள்ளது.
முன்னணி கதாநாயகர்களுக்கு நிகராக, ருத்ரதாண்டவம் வசூலை குவித்து வருவதால், படக்குழு உற்சாகமடைந்துள்ளது.