தேவையான பொருட்கள்
பால் – 1/2 லிட்டர்
ரோஸ் மில்க் எசென்ஸ் – 100 மில்லி
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் தூள் – 10 கிராம்
செய்முறை
பாலை நன்கு காய்ச்சி ஆறவைக்கவும்.
சர்க்கரை, ஏலக்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து தனியாக வைக்கவும்.
பால் நன்றாக ஆறியதும் அதில் ரோஸ் மில்க் எசென்ஸ், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.
தேவைப்படும் போது ஒரு கண்ணாடி டம்ளரில் பரிமாறவும்.
தேவைப்பட்டால் பாதாம் பருப்பை சீவி அதில் அலங்கரித்து தரலாம்.
#LifeStyle
                                                                                                                                                
                                                                                                    
                    
                            
                                
				            
				            
				            
				            
 
			        
 
			        
 
			        
 
			        
Leave a comment