images 2 1 1
சினிமாபொழுதுபோக்கு

மோதிரத்தால் வெளிப்பட்ட ராஷ்மிகாவின் காதல்!

Share

தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் நடித்த புஷ்பா படம் ராஷ்மிகாவின் சினிமா பயணித்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தி மொழி படங்களிலும் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை ராஷ்மிகா காதலித்தார்.

2017-ல் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அடுத்த வருடமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை ரத்து செய்து பிரிந்தனர்.

பின்னர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்ததாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா இதையடுத்து நடிகை ராஷ்மிகா தனது பிறந்த நாளின் போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் விஜய் தேவரகொண்டாவின் விருப்பமான மோதிரம் என்றும் இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் விரைவில் மகிழ்ச்சியான செய்தியை ராஷ்மிகா கூறுவார் என்றும் ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது.

இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை ராஷ்மிகா அந்த ஊடகம் வெளியிட்டிருந்த பதிவை பகிர்ந்து ‘ரொம்ப யோசிக்காதீங்க’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

#cinema

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...