தளபதியுடன் இணையும் ராஜு

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67-வது திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் டிசம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதேபோல் கவுதம் மேனன், பிரித்விராஜ் சுகுமாரன், மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜூ ஜெயமோகன் இந்த படத்தில் இணைந்து இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ezgif 4 e9009e1fc6

அதேபோல் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மைனா நந்தினி இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மைனா நந்தினி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’தளபதி 67’ படத்தின் தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருப்பது பார்க்கும்போது இந்த படம் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#Cinema

Exit mobile version