நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.
முதல் படமான டாக்டர் படத்தின் மூலமே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் பிரியங்கா.
டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் சிவகார்த்திகேயனின் டான் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இவர் அடுத்ததாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் இணையவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள ‘தலைவர்-169’ படத்தில் பிரியங்கா ஒப்பந்தமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக்கவுள்ள திரைப்படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Cinema
Leave a comment