tamilni 549 scaled
சினிமாபொழுதுபோக்கு

பெரிய நடிகர்களுக்கு குறி வைக்கும் பிரியா பவானிசங்கர் ..!

Share

பெரிய நடிகர்களுக்கு குறி வைக்கும் பிரியா பவானிசங்கர் ..!

நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்தாலும் அஜித், விஜய், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களுடன் இன்னும் நடிக்கவில்லை என்பதால் அடுத்த கட்டமாக தனது படங்கள் மாஸ் நடிகர்களுடன் நடிக்கும் படமாக இருக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ அருள்நிதியின் ’டிமான்டி காலனி 2’ விஷாலின் ‘ரத்னம்’ போன்ற தமிழ் படங்களிலும் ’பீமா’ ‘ஜீப்ரா’ உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்தாலும் பெரிய நடிகர்களுடன் இன்னும் பிரியா பவானி சங்கர் ஜோடி போடாத நிலையில் அடுத்த கட்டமாக அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடிக்க முயற்சி செய்து வருவதாகவும் இதற்காக பெரிய நடிகர்களுக்கு தூது விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அவரது முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும் அடுத்த படத்திலும், அதேபோல் தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர் ஒருவர் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...