‘பொன்னியின் செல்வன்!’
எல்லோரிடமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிற திரைப்படம்.காரணம்,புகழ்ப் பெற்ற, ‘பொன்னியின் செல்வன்! ‘நாவல்தான்.
இந்த நாவலைப் படித்து விட்டு மனதளவில் கொண்டாடிக்கொண்டிருப்பவர்கள் இத் திரைப்படம் அந்த நாவலின் பெயரை கெடுத்து விடக்கூடாதே என எதிர்பார்த்து நகத்தைக் கடித்துக் கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் கதாபாத்திரங்களைப் பற்றி ஓரிரு வரிகளில் பார்ப்போம்.
1.கார்த்தி-வந்தியத் தேவன்:எம்ஜிஆர் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரம். கார்த்தி தலையில் விழுந்து விடிந்திருக்கு இக் கதாபாத்திரம்.
இக்கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வுதான் கார்த்தி.வீரம்,நக்கல்,நையாண்டி,விசுவாசம்,காதல்-என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிற அருமையான கதாபாத்திரம்.இதை இவர் மிக சரியாகவே செய்வார்.
2.ஜெயம் ரவி-அருள்மொழி வர்மர்:கல்கி அவர்கள் வர்ணித்தது போலவே மிக அழகான சோழநாட்டு இளவரசருக்கு ஏற்ற தேர்வு.
3.விக்ரம்-ஆதித்த கரிகாலர்:நூறு சதவீதம் மிக நேர்த்தியான தேர்வு.
4.த்ரிஷா-குந்தவை:இக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக எனக்கு தோன்றவில்லை.ஆனால்,காட்சிகளில் இவருடைய நடிப்பால் அதை மறக்கச் செய்ய வேண்டும்.இவருக்குப் பதிலாக வேறு ஒரு நடிகையும் என் மனதில் தோன்றவில்லை.
அருள்மொழி வர்மருக்கு(ஜெயம் ரவி)அக்கா,ஆதித்த கரிகாலனின்(விக்ரம்)தங்கை.அறிவு முதிர்ச்சியான ஆளுமைமிக்க இளவரசி.
6.ஐஸ்வர்யா ராய்-நந்தினி:கல்கியின் பார்வையில் இக் கதாபாத்திரத்தின் வயது 25லிருந்து 30-தான்.ஆனால்,இக் கதாபாத்திரத்திற்கு 50 வயது நெருங்கியுள்ள ஐஸ்வர்யாராயை போட்டுள்ளார்கள்.படித்தவர்களுக்குதான் இது இடைஞ்சல்.படம் மட்டும் பார்ப்பவர்களுக்கு ஏதும் தெரியப்போவதில்லை.ஐஸ்வர்யா ராய் இப்பொழுதும் 35 வயதுப் பெண் போலத்தான் இருக்கிறார்.கதையின் ஆணிவேர்.நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள கதாபாத்திரம்.
70 வயதான பெரியபழுவேட்டையரின்(சரத்குமார்) மனைவி.சோழப் பேரரசை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே திட்டம் போட்டு பெரிய பழுவேட்டையருக்கு மனைவியானவள்.ஆதித்த கரிகாலனின் முன்னாள் காதலி.
5.சரத்குமார்-பெரிய பழுவேட்டையரையர்:போரினால் 64 விழுப்புண்களை தாங்கிய மாவீரர்.சோழப் பேரரசை கவிழ்த்து மதுராந்த சோழனை பொம்மை அரசனாக்கி தனது ஆட்சியின் கீழ் சோழப் பேரரசை நிறுவ நினைப்பவர்.
இவர் இக் காதபாத்திரத்திற்கு பொருத்தம் என்றாலும் எனக்கென்னவோ சத்யராஜ்தான் மனக்கண் முன் நிற்கிறார்.கல்கி அவர்கள் இவருடைய உருவத்தை வரையும் பொழுது சத்யராஜ் மிகப் பொருத்தமாக இருப்பாரே என்றே எனக்குத் தோன்றியது.
6.பார்த்திபன்:சின்ன பழுவேட்டைரையர்:மிகப் பொருத்தமான தேர்வு.இவருக்கு காட்சிகள் மிகக் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.இவருக்கும் பெரியபழுவேட்டைரையருக்கும் நந்தினி விஷயமாக நடக்கும் உக்கிரமான உரையாடல் போர் காட்சியை மிக அற்புதமாக எழுதியிருப்பார் கல்கி அவர்கள்.படத்தில் இக் காட்சி இருந்தால்தான் சிறப்பு.
எப்படியோ இரண்டு நாளில் திரையில் காணப்போகிறோம். நிறைவா? குறைவா? என விளங்கியும் விடும்.
நன்றி – மணிசேகரன்
#PonniyinSelvan
Leave a comment