ponniyin selvan second single 1659847338
சினிமாபொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் காஸ்ட்யூம்கள், நகைகள் – லைகா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ

Share

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரம்மாண்டத்திற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட காஸ்ட்யூம்கள் மற்றும் நகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிந்த ஏகா லெகானி என்பவர் இது குறித்து கூறிய போது ’நான் தஞ்சைக்கு நேரடியாக சென்று அங்கு உள்ள கோவிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்து என்ன மாதிரியான காஸ்ட்யூம்கள் உருவாக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். டிசைனர்களிடம் காஸ்டியூம் உருவாக்கும் போதே பல ஐடியாக்களை கூறினேன். சோழ தேசத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் காஸ்ட்யூம்களில் இருக்க வேண்டும் என்பதை நான் கவனமாக இருந்தேன் என்றும் கூறினார்.

அதேபோல் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகள் குறித்து கூறிய பிரதிக்ஷா பிரசாந்த் அவர்கள் கூறியபோது, ‘மணிரத்னம் அவர்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் அவரிடம் இந்த படத்தில் பயன்படுத்தப்படும் நகைகள் குறித்து ஆலோசித்து அதன் பிறகு நகைகளைத் தேர்வு செய்தோம் என்றும் சோழ தேசத்தில் உள்ள ராணிகள் பயன்படுத்தும் நகைகள் குறித்து ஏராளமாக ஆய்வு செய்து அதன் பின்னர் பிரத்யேகமாக நகைகள் டிசைன் செய்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...

12 1763393832
சினிமாபொழுதுபோக்கு

மகாராஜா பட நடிகை சாச்சனாவுக்கு புதிய கார் பரிசளித்த ரசிகர்கள்: மகிழ்ச்சியில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல்!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிப் பிரபலமான ‘மகாராஜா’ திரைப்படத்தில் மகளாக நடித்ததன் மூலம்...

12 1763392008
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் ரஜினிகாந்தின் குருநாதர் முன்னாள் இயக்குநர் கே.எஸ். நாராயணசாமி காலமானார் – ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், சென்னை திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி, இந்தியத் திரையுலகின் பல...

124994710
சினிமாபொழுதுபோக்கு

திரும்பி வருகிறார் இயக்குநர் பேரரசு: 10 ஆண்டுகள் கழித்து அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி போன்ற வெற்றிப் படங்களை அளித்த இயக்குநர் பேரரசு, சுமார்...