பொன்னியின் செல்வன் படம் 400 கோடியை கடந்தது! வைரலாகும் நடிகர் பார்த்திபன் பதிவு

SLParthiban 9

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

இத் திரைப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படத்தின் ரூ.400 கோடி வசூல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” ரூ. 400 கோடியை கடந்தது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்பலாம்! எழுப்பினால்… இன்னும் ஒரு 100!” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு தற்போது வைரலாக்கி வருகி வருகின்றது என்பது குறிப்பிடத்தாகும்.

#pathiban #ponniyinselvan #cinema

 

Exit mobile version