rahman ponninadhi182022m1 1
சினிமாபொழுதுபோக்கு

கொரியர்களை ஈர்த்த பொன்னி நதி பாடல்!

Share

அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளாவிய ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப் படம் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா உட்பட பல நாடுகளில் வசூலில் சாதனை செய்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் இதுவரைக்கும் தமிழ் படங்கள் வசூலில் செய்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்திருக்கிறது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திரையிட்ட இடங்களில் ரசிகர்கள் உணர்ச்சிவயப்பட்டு படத்தை ரசித்து வருகிறார்கள். இதேபோல தென்கொரியாவில் தமிழ் மொழியிலேயே இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

இங்கு ஒரு திரையரங்கில் படத்தை திரையிடுவதற்கு முன்பாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற “பொன்னி நதி பார்க்கணுமே” என்ற பாடலை ஒலிக்க விட்டு அதை தென்கொரியாவின் ரசிகர்களும் சேர்ந்து பாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் நாவல் உலகில் உள்ள அனைவரையும் தமிழ் என்ற புள்ளியில் இணைத்திருப்பதோடு ராஜ ராஜ சோழனின் பெருமையை உலகறிய செய்திருக்கிறது என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

#Cinema

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...