அம்மன் வேடத்தில் போட்டோ ஷூட்! – கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்

அம்மன் வேடத்தில் இருக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளன.

நடிகைகள் கே ஆர் விஜயா முதல், மீனா மற்றும் ரம்யா கிருஷ்ணன் வரை ஆரம்பம் முதல் இன்று வரை பல நடிகைகள் அம்மன் வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள்.

இந்த நிலையில், தற்போது நடிகை ரம்யா பாண்டியன் அம்மன் வேடமிட்டு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் நேர் எதிரான விமர்சனங்களையும் சந்தித்துள்ளன.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.

272615741 7008956569176607 454536759983505186 n 1

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அடிக்கடி போட்டோ ஷூட் நடாத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருபவர். அவரது புகைப்படங்கள் ரசிகர்களால் மிகப்பெருமளவில் வைரலாக்கப்படுவது அனைவரும் அறிந்த விடயம்.

அண்மையில் கறுப்பு சேலை அணிந்து அவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் மிகப்பெருமளவில் வைரலாகின.

எப்பொழுதுமே ரம்யா பாண்டியனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஹோம்லி லுக்கில் இருந்தாலும் கவர்ச்சியாகவே காணப்படுபவை.

தற்போது அம்மன் வேடமிட்டு இவர் போட்டோ ஷூட் நிகழ்த்தியுள்ளார். அம்மன் வேடமிட்டாலும், அதிலும் கவர்ச்சியாகவே போட்டோ ஷூட் நிகழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

இந்த புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வந்தாலும், அம்மன் வேடத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நிகழ்த்தியுள்ளமையால் கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இருப்பினும் அவரது
ரசிகர்கள் இன்னொரு பக்கம் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version