தேவையான பொருட்கள்
மக்ரோனி – 1 கப்
பால் – 2 1/2 கப்
சர்க்கரை – 5 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
முந்திரி – 2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின்னர் அதில் மக்ரோனியை சேர்த்து, மக்ரோனி பாதியாக வேகும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி நீரை வடித்து, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே பேனில், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட வேண்டும். அடுத்து அதில் மக்ரோனியை சேர்த்து, பாலில் மக்ரோனி நன்கு மென்மையாக வேக வைத்து, பின் அதில் கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.
பாலானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், பாஸ்தா பாயாசம் ரெடி!!!
#LifeStyle
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment