தேவையான பொருட்கள்
முட்டை – 5
பன்னீர் – அரை கப்
பச்சை மிளகாய் – 4
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
பன்னீரை துருவிக்கொள்ளவும். ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், ப.மிளகாய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான பன்னீர் ஆம்லெட் ரெடி.
#LifeStyle
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment