2 Copy 2 62
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு! 30 நிமிடத்தில் செய்யலாம்.. எப்படி செய்யலாம்?

Share

சுவையான எண்ணெய் கத்தாரிக்காய் குழம்பு வீட்டிலே எளிய முறையில் எப்படி தயரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கத்திரிக்காய் – 1/4 கிலோ
  • சின்ன வெங்காயம் – 10
  • நல்லெண்ணெய் – 150 மில்லி
  • சீரகம் – சிறிது
  • வெந்தயம் – 1/2 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • மிளகு – 1/4 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 15
  • தனியா – 1/4 கப்
  • வேர்கடலை – 4 ஸ்பூன்
  • எள் – 2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • தோலுடன் பூண்டு – 1
  • கருவேப்பிலை – 1 கைப்பிடி
  • புளி – நெல்லிக்காய் அளவு (சிறிது தண்ணீரில் ஊற வைத்து சேர்க்கவும்)

செய்முறை

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு தனி தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

பின்னர் அதனுடன் வறுத்ததுடன் சேர்த்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைக்கவும்.

கத்திரிக்காயை நான்காக கீறி அதில் இந்த மசாலாவை ஸ்டஃப் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் ஸ்டஃப் செய்த கத்திரிக்காய், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.

கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் மீதி அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து சிம்மில் கொதிக்கவிடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...