சினிமாபொழுதுபோக்கு

வெளியானது நயன் – விக்கி திருமணத் திகதி! – உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Share
Share

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. இவர்களின் 7 ஆண்டு கால காதல் வாழ்க்கை திருமணத்தில் முடியவுள்ளது.

ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. சினிமாவில் மட்டுமல்லாது தனது சொந்த வாழ்க்கையிலும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து தனக்கென தனியிடம் பிடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந், தளபதி விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, விஷால், சரத்குமார், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிபடங்களை கொடுத்து வருபவர் நயன்தாரா. நயனின் மாக்கெட் இடையில் சிறிது ஆட்டம் கண்டாலும் தற்போது உச்சத்தில் உள்ளது.

இதேவேளை, சிம்புவின் போடா போடிதிரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இயக்குநர் என்பதைத் தாண்டி படலாசிரியராகவும் வலம் வருபவர்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடி தான் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இணைந்தவர் நயன்தாரா. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே மலர்ந்த காதல் இன்று வரை தொடர்கிறது.

Nayanthara Vignesh Shivan onam 8

மீண்டும் விஜய் சேதுபதி – நயன்தாரா – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாக்கி அண்மையில் வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் . படத்தில் சமந்தாவும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அண்மையில் வெளியான இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவ்வாக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் அடிக்கடி தானும் நயனும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருபவர். அவை ரசிகர்களால் வேகமாக வைரலாக்கப்பட்டு வருவது அறிந்ததே.

காத்துவாக்குல ரெண்டு காதல் வெற்றியை அடுத்து நயன் – விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி சென்று வந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், இவர்களது திருமணம் எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி திருப்பதியில் நடைபெறவுள்ளது. அதற்காக திருப்பதி சென்ற நயன் – விக்கி ஜோடி திருப்பதியில் திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 7 வருட காதல் வாழ்க்கை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திருமணத்தில் முடியவுள்ளது. நயன் – விக்கி திருமணத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.

280060420 166608255758951 3899826468746346436 n

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...