9 8
சினிமாபொழுதுபோக்கு

பல வருடங்கள் கழித்து வெளிவரும் மதகஜராஜா படம்.. டைட்டில் அர்த்தம் என்ன தெரியுமா

Share

பல வருடங்கள் கழித்து வெளிவரும் மதகஜராஜா படம்.. டைட்டில் அர்த்தம் என்ன தெரியுமா

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தனம் இணைந்து நடித்து உருவான திரைப்படம் மதகஜராஜா. இப்படத்தில் அஞ்சலி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் பாலிவுட் நடிகர் சோனு Sood வில்லனாக நடித்திருக்கிறார். கடந்த 2013ஆம் ஆண்டே இப்படம் வெளிவர தயாராக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

பின் 12 ஆண்டுகள் கழித்து தற்போது 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சுந்தர்.சி, விஷால் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதகஜராஜா படத்தின் குறுகிய தலைப்பு எம்ஜிஆர் என்பதை நாம் அறிவோம். ஆனால், மத கஜ ராஜா என்கிற தலைப்புக்கு விரிவாக்கம் என்ன என்று தெரியுமா.

படத்தின் ஹீரோயின் அஞ்சலியின் கதாபாத்திர பெயர் ‘மதனதேவி’, மற்றொரு ஹீரோயின் வரலட்சுமியின் கதாபாத்திர பெயர் ‘கஜராணி’ மற்றும் ஹீரோ விஷாலின் கதாபாத்திர பெயர் ‘ராஜா’ . இவர்களுடைய கதாபாத்திர பெயர்கள் தான் படத்தின் தலைப்பாகும்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...