nayanthara
பொழுதுபோக்குசினிமா

லேட் ஆனாலும் லேட்டஸ் – ‘கண்மணி’யாய் களமிறங்கிய நயன்

Share

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாக ரசிகர்களை இன்பக்கடலில் ஆழ்த்தி வருகின்றன.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போஸ்டர் இன்றையதினம் வெளியாகும் என படக்குழுவினரால் நேற்றையதினம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம், விஜய் சேதுபதி படத்துடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. அதில் விஜய் சேதுபதியின் பெயர் ராம்போ என குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து சற்று நேரத்தில் படத்தின் இரண்டாவது லுக் சமந்தாவின் படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது. அதில் சமந்தாவின் பெயர் கதீஜா எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்தடுத்து வெளியான போசுடர்களில் நயன்தாரா தரிசனம் கிடைக்காத நிலையில், நயன் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்துடன் காணப்பட்டாலும், வெளியாகிய இரண்டு போஸ்டர்களும் வைரலாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தவமிருந்த ரசிகர்களுக்கு விருந்து படைப்பது போல படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்டரில் அழகு பொம்மையாய் தோன்றியுள்ளார் நயன். அதில் அவரது பெயர் கண்மணி என குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் பிரதான கதாபாத்திரங்களின் படங்களுடுன் தனித்தனியாக போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவை ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இபின்ரு காலை முதலே ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ருவிட்டரில் ரெண்டிங்கில் உள்ளது.

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாக்கி வருகிறது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. படத்துக்கு இடையமைக்கிறார் அனிருத்.

படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது டப்பிங் உட்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

kvrk 1 2

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...