tamilnaadi 77 scaled
சினிமாபொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி இல்லை! ஆவேசமாக பேசிய ஐஸ்வர்யா

Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி இல்லை! ஆவேசமாக பேசிய ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ரஜினியும் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதுபோலவே, குறித்த இசை வெளியிட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், மேடையில் பேசிய ஐஸ்வர்யா ரஜினி, என் அப்பாவை சங்கி என சொல்லும்போது கோவம் வரும். இப்போ சொல்கிறேன், ரஜினிகாந்த் சங்கி கிடையாது என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சமூக வலைதளத்தில் இருந்து எப்போதுமே விலகியே இருக்கிறேன். ஆனாலும், என்னுடைய டீம் அடிக்கடி ஒரு விஷயத்தை காட்டிக் கொண்டே இருந்தனர். அதிலும் குறிப்பாக சங்கி என முத்திரை குத்தப்படும் அந்த வார்த்தை எனது மனதை ரொம்பவே உருத்துகிறது.

உங்களுக்கு எல்லாம் தெளிவா புரியும்படி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி இல்லை. எங்கப்பா சங்கியா இருந்திருந்தா லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்கவே மாட்டார்.

மதங்களை கடந்து மனிதர்களை மட்டுமே நேசக்கூடிய மனிதர் அவர் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். தற்போது இந்த விஷயம் வைரலாகி வருகின்றது.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...