பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட்டுக்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகிவந்த வண்ணம் உள்ளது.
சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆழ்வார்க்கடியான் என்ற கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ஜெயராமின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இவரிடம் எந்த ஒரு ரகசியமும் தப்பிக்க முடியாது என்றும் மிகச் சிறந்த உளவாளி என்றும் இந்த போஸ்டருக்கு கேப்ஷனாக கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் கார்த்தி இந்த போஸ்டர் குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் block செய்யவும் முடியவில்லை report பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா.
#Karthi #PonniyinSelvan #Cinema
Leave a comment