கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் 1950களில் இருந்தே உலகின் சிறந்த நாவலாக காணப்பட்டு வருகிறது.
புத்தக சந்தையில் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக விற்பனையாகும் நுல்களில் பொன்னியின் செல்வன் முன்னிலையில் இருக்கும்.
இந்த நூலை எம்ஜிஆர் படமாக்க வேண்டும் என்று முயற்சித்தார். அதற்காக இயக்குனர் மகேந்திரனை திரைக்கதையும் எழுத வைத்தார். சில காரணங்களால் அது தடைப்பட்டது. பின்னர் தான் தயாரித்து கமல் நடிப்பில் அதை உருவாக்க வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால் அதுவும் நடைபெறவில்லை.
எம்ஜிஆருக்கு பொன்னியின் செல்வன் கனவு படமானது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் பல முயற்சிகளுக்குப் பிறகு இதனை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள இந்த பொன்னியின் செல்வனில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் கைகோர்த்துள்ளனர்.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா பொன்னியின் செல்வனை இணைய நாடகமாக தயாரித்து வருகிறார். அவரது தயாரிப்பில் மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரை அனிமேஷன் கதாபாத்திரமாக மாற்றி திரைப்படமாகவும், இணைய நாடகமாகவும் உருவாக்க இருக்கிறார்கள்.
அஜய் பிரதீப் இயக்கத்தில் உருவாக்கஉள்ள இந்த படைப்புக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். வேவ்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Leave a comment