மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘கலகத் தலைவன்’. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார்.
மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலகத் தலைவன் படத்தை பார்த்த ரசிக்ரகள் பலரும் படத்தின் கதைக்களம், திரைக்கதை மற்றும் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் உள்ளிட்ட பலரின் நடிப்பையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தடம் பதித்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டிருப்பது, பாக்ஸ் ஆபிஸில் கலகத் தலைவன் மீது காதல் தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
#cinema
Leave a comment