‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செக்கண்ட் லுக் போஸ்டர்கள் சற்று முன்னர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன.
படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில். பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்னர் வெளியாகியது.
இதேவேளை தற்போது செக்கண்ட் லுக் போஸ்ரரும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி மட்டுமே காணப்படுகிறார். அதில் அவரது பெயர் ராம்போ என குறிப்பிப்பட்டுள்ளது.
படத்தின் செகண்ட் போஸ்டரில் சமந்தா மட்டுமே காணப்படும் நிலையில், அதில் அவரது பெயர் கதிஜா என குறிப்பிடப்பட்டுள்ளது.
நயன் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும். பர்ஸ்ட் லுக் மற்றும் செக்கண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்றைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட பலர்
இது திரைப்படத்தில் இணைந்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிரலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Leave a comment