medium 2022 06 22 64f0948509 1
சினிமாபொழுதுபோக்கு

தளபதியை வைத்து படம் இயக்குகிறாரா ஆர்ஜே பாலாஜி?

Share

எல்கேஜி , மூக்குத்தி அம்மன் , வீட்ல விசேஷம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த ஆர்ஜேபாலாஜி அடுத்ததாக தளபதி விஜயை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆர்ஜே பாலாஜி கூறிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் அவர் கூறுவதாவது, “ இந்த ஆண்டு ஜனவரி மாதம் விஜய் அவர்களுக்கு கதை சொல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

அவருடன் கதை சொன்ன சில மணி நேரங்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் அவரிடம் கதை சொல்வதற்காக இரண்டு மாதங்கள் தயார் செய்தேன். 40 நிமிடங்கள் அவரிடம் ஒரு லைன் மட்டும் கதை சொன்னேன்.

கதையை கேட்டு அவர் தனக்கு பிடித்ததாகவும் அதே நேரத்தில் ‘மூக்குத்தி அம்மன்’ போல உங்க ஸ்டைலில் ஒரு கதையை எதிர்பார்க்கிறேன். இது மிகவும் பெரிதாக இருக்கு என்று கூறினார்.

இந்த படத்திற்காக எவ்வளவு காலம் உங்களுக்கு தேவைப்படும்? என்று கேட்டார். அதற்கு நான் ஒரு வருடம் ஆகும் என்று கூறினேன்.

என்ன ஒரு வருடமா? என்று விஜய் அவர்கள் கேட்டதற்கு வீட்ல விசேஷம்’ என்ற படம் எடுத்து கொண்டிருக்கிறேன். அதை இயக்குவதற்கு 5 மாதம் ஆகியது. இந்தப் படம் மிகச் சரியாக வர வேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்.

‘வீட்ல விசேஷம்’ மாதிரி சின்ன படம் எடுக்கும்போது அவ்வளவு காலம் என்றால் உங்களைப் போன்ற பெரிய ஸ்டார் வைத்து எடுக்கும் போது எவ்வளவு பெரிய கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

அதற்கு அவர் தாராளமாக கதையை டெவலப் செய்யுங்கள், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து இது குறித்து பேசலாம் என்று கூறினார்.

தளபதி 67 இல்லை என்றால் தளபதி 77வது பண்ணுவேன் என்றும், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கால அவகாசம் மட்டுமே வேண்டும் ”என்று விஜய்யிடம் கதை கூறிய அனுபவத்தை ஆர்ஜே பாலாஜி பகிர்ந்து கொண்டார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...