தைப்பூசம் அன்று இறந்தார் அவருக்கு முருகன் காலடியில் இடம் … கண்ணீர் ததும்ப உடைந்த குரலில் இரங்கல் தெரிவித்த நடிகர் வடிவேலு…
இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் நேற்று இலங்கையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பல பிரபலங்கள் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் வடிவேலு அவர்களும் தனது ஆழ்ந்த இலங்கை செய்தியை ஆடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5:30 மணியளவில்இலங்கையில் உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தனது மகளை காண இளையராஜா கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று சென்றிருந்தார்.
இதனை அடுத்து யுவன் சங்கர் ராஜா, மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இலங்கை சென்றிருக்கின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல் செய்தியை தற்போது தெரிவித்து வரும் நிலையில் நடிகர் வடிவேலு அவர்கள் ஆடியோ மூலம் தனது இரங்கல் இவாறு தெரிவித்துள்ளார்.
” இசைஞானி இளையராஜாவின் அருமை மகள் நேற்று கொழும்பில் இறந்து விட்டார் என்ற செய்து தற்போதுதான் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன். நான் ஷூட்டிங் முடித்து இப்போதுதான் வந்தே இந்த செய்தியை பார்த்ததும் திகைத்து விட்டது 47 வயதில் இப்படி ஒரு மரணம் நிகழ வேண்டுமா என்று எனக்கும் குடும்பத்தாருக்கும் ஒரே அதிர்ச்சியாக இருந்தது. இந்த வயதில் அதிக வெற்றி பாடல்களை பாடியுள்ளார். அவங்க தைப்பூசம் அன்று தான் இறந்துள்ளார் அந்த முருகனின் காலடியில் சென்று சேர்வார்கள். அவரின் குடும்பத்தாருக்கு எனது சார்பாக ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
- bhavatharini ilayaraja
- Featured
- Ilayaraja
- ilayaraja ar rahman
- ilayaraja bavatharini
- ilayaraja daughter
- ilayaraja daughter bhavadharini
- ilayaraja daughter bhavatharini
- ilayaraja daughter bhavatharini death
- ilayaraja daughter bhavatharini passed away
- ilayaraja daughter bhavatharini singing
- ilayaraja daughter bhavatharini songs
- ilayaraja daughter bhavatharini speech
- ilayaraja daughter death
- ilayaraja daughter songs
- ilayaraja hits
- ilayaraja songs
- ilayaraja tamil hits
Comments are closed.