tamilnaadi 85 scaled
சினிமாபொழுதுபோக்கு

தேனியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ள பவதாரணியின் உடல்

Share

தேனியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ள பவதாரணியின் உடல்

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று சனிக்கிழமை (27) தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தற்போது பவதாரணியின் உடல் தேனி மாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே உள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஓதுவார்கள் சிவபுராணம் பாடி வருகின்றனர்.

பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து இன்று மாலை பவதாரணியின் உடல் இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில்,பெருமளவான திரைப் பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இளையராஜா மகள் பாடகி பவதாரணி சிறுநீரக புற்றுநோயால் நேற்றைய தினம் இலங்கையில் உயிரிழந்திருந்தார்.

சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இதையடுத்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பவதாரணியின் உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் இன்று இரவு 10 மணியளவில் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இதனையடுத்து அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (27.02.204) இறுதி கிரியைகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...