1788980 sam2
சினிமாபொழுதுபோக்கு

‘நான் உயிரோடுதான் இருக்கிறேன்’! – உணர்ச்சிவசப்பட்ட சமந்தா

Share

நடிகை சமந்தா சிகிச்சை எடுத்துக் கொண்டு டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகை சமந்தா யசோதா படத்தின் ரிலீஸை முன்னிட்டு பல்வேறு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கான பிரத்யேக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் தொடர்பான நேர்காணில் பேசிய சமந்தா தனது உடல்நலம் குறித்து பேசியுள்ளார்.

1788983 sam

அதில், “நோயினால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். நான் முன்பு சொன்னது போலவே சில நாட்கள் கடினமாக உள்ளது. என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. படுக்கையில் இருந்து கூட எழ முடியவில்லை. சில நேரம் திரும்பி பார்த்தால் ரொம்ப தூரம் வந்து விட்டதுபோல் உணர்கிறேன். இந்த நோய்க்கு எதிராக போராட வேண்டிய நிலையில் இருக்கிறேன். நிறைய மருந்து எடுத்துக்கொள்கிறேன். இதனால் சோர்வாக இருக்கிறது. நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளியான செய்திகளை பார்த்தேன். அப்படி இல்லை.

நான் உயிரோடுதான் இருக்கிறேன். நான் எப்போதும் ஒரு போராளியாகவே இருந்துள்ளேன். இந்த நோயை எதிர்த்தும் போராடுவேன்” என்று கண்கலங்கி பேசினார்.

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் ‘யசோதா’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இத் திரைப்படம் நவம்பர் 11-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...