1605085235 063
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

சுவையான அச்சு முறுக்கு எளிதில் செய்வது எப்படி?

Share

தீபாவளியை முன்னிட்டு சுவையான அச்சு முறுக்கு எளிதில் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்:

  • அரிசி மாவு – 1 கப்
  • மைதா – 1/4 கப்
  • முட்டை – 4
  • பொடித்த சர்க்கரை – 1/2 கப்
  • தேங்காய்ப்பால் – 1 கப்
  • வெள்ளை எள் – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
  • எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

அரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.

வாணலியில் எண்ணையை விட்டு காய வைக்கவும். எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை (நீளமான கம்பி முனையில் விதவிதமான வடிவத்தில் அச்சு கடைகளில் கிடக்கும்) எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும்.

உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.

அது சிவப்பு நிறமாக மாறும்போது எடுத்து எண்ணெய் வடிகட்டி நீக்கவும். ஈரம் இல்லாத பாத்திரத்தில் அச்சு முறுக்கினை பாதுகாப்பாக இரண்டு மாதங்கள் வரையில் வைக்கலாம்.

குறிப்பு

அச்சு முறுக்கு செய்யும்போது முட்டை வேண்டாம் என்வர்கள் அதனை நீக்கி விடலாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...