1 vallarai thuvaiyal 1664196205
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

ஆரோக்கியமான வல்லாரைக் கீரை துவையல்! எப்படி செய்யலாம்?

Share

வல்லாரைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. இதனை அடிக்கடி சமைத்துக் கொடுத்தால், நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.

வல்லாரைக் கீரையைக் கொண்டு துவையல் போன்றவை செய்யலாம். இதில் வல்லாரைக் கீரை துவையல் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

அந்தவகையில் தற்போது வல்லாரைக்கீரை துவையல் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

1 vallarai thuvaiyal 1664196205

தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்தது)
  • வெங்காய வடைவெங்காய வடை
  • பூண்டு – 5 பற்கள்
  • வரமிளகாய் – 2
  • வல்லாரைக் கீரை – 2 கப்
  • தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
  • வெல்லம் – 1 டீஸ்பூன்
  • புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மிளகு, வரமிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வல்லாரைக் கீரையை போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின் அதில் தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

*பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, வெல்லம், புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான வல்லாரைக் கீரை துவையல் தயார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...