Nayan
பொழுதுபோக்குசினிமா

புத்தாண்டை வரவேற்கும் நயன் – விக்கி ஜோடி – வைரலாகும் வீடியோ

Share

லேடி சூப்பர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியின் புதுவருட கொண்டாட்ட வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டமை அனைவரும் அறிந்ததே. விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர் விக்னேஷ் சிவன். நயன்தாராவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி வெளியிட்டு தமது காதலின் ஆழத்தை அடிக்கடி ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவார்.

vigneshsivn112022m6

அண்மையில் கூட, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது நயனுடன் இணைந்து கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தன.

தற்போது புதுவருட கொண்டாட்டத்துக்காக டுபாய் சென்றுள்ள நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் புதுவருட கொண்டாட்ட வீடீயோ வைரலாகி வருகிறது.

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் முகமாக வன வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பித்த நிலையில், மால் ஒன்றின் முன்னாள் நயனும் விக்னேஷ் சிவனும் புதுவருட வாழ்த்துக்கள் கூறி கட்டித்தழுவும் வீடியோ வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிறகென்ன தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

vigneshsivn112022m3

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...